×

தானியங்கி கார் தயாரிப்பில் அமெரிக்காவை விஞ்சி உலகின் முதல் தானியங்கி டாக்சியை தயாரித்த சீனா!!

பெய்ஜிங் : தானியங்கி கார் தயாரிப்பில் அமெரிக்காவை விஞ்சி உலகின் முதல் தானியங்கி டாக்சியை சீனா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கூகுளுக்கு நிகராக சீனாவில் செயல்படும் நிறுவனம் பெய்டு தயாரித்துள்ள அப்போலோ கோ என்ற தானியங்கி டாக்ஸி, ஓட்டுனரே இல்லாமல் பெய்ஜிங் நகரை வலம் வருகிறது. ஓட்டுனரே இல்லாத இந்த காரில் நீங்கள் ஏறி அமர்ந்து முன்னே தெரியும் தொடு திரையில் பட்டனை தட்டினால் போதும். சீட் பெல்ட் அணியுமாறு உங்களை அறிவுறுத்தும் இந்த கார். பின்னர் தாமாகவே புறப்பட்டு சாலையில் செல்லும்.

சாலையில் முன்னும் பின்னும் வரும் வாகனங்கள் குறுக்கே செல்லும் பாதசாரிகள் போன்ற அனைத்து குறுக்கீடுகளையும் தானியங்கி காரில் உள்ள சென்சார் கண்காணிக்கும். இவை அனைத்தையும் காருக்குள் இருக்கும் திரையில் நாம் பார்க்க முடியும். குறுக்கீடுகளை அடையாளம் கண்டு அவை நகரும் வேகம் திசையை கணக்கிட்டு தானியங்கி கார் தமக்கான பாதையை வகுத்துக் கொள்கிறது. அப்போலோ கோ செயலி மூலம் டாக்சியை புக் செய்தால் இந்த கார் நம் இருக்கும் இடைத்திற்கே வந்து சேரும். காரின் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து நமது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு நாம் பயணத்தை தொடங்கலாம். 18 வயது முதல் 60 வயது வரையிலான யாரும் இந்த காரில் பயணிக்கலாம். இதே இடத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாட்டு வீரர்களையும் தானியங்கி காரில் அழைத்து செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. 


Tags : China ,United States , தானியங்கி கார்
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன